பெருத்துப் போன தொப்பையை எப்படி தான் குறைக்கிறது?? இதோ உங்களுக்காக ஒரு சிம்பிள் டயட்!!
வயிற்றில் சுற்றி உள்ள கொழுப்பை ஏழு நாட்களில் சரி செய்வது எப்படி?உடல் பருமனை குறைப்பது பெரிய சிரமம் என்றால் அதில் தொப்பையை குறைப்பது இன்னும் கடினம். உடல் பருமன் உண்டாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
ஆனால் தொப்பை உண்டாவதற்கு மிக முக்கியக் காரணமே உணவுமுறை தான். ஏற்கனவே பெருத்துப் போன தொப்பையை எப்படி தான் குறைக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா இதோ உங்களுக்காக தான் இந்த ஒரு வார சிம்பிள் டயட்.
எல்லாருக்கும் தொப்பையை குறைப்பது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. மாங்கு மாங்குனு உடற்பயிற்சி செய்தால் கூட இந்த தொப்பை என்பது குறைந்த பாடில்லை என்கின்றனர் பலர்.
ஆனால் உங்க தொப்பையில் 7 நாட்களில் வியத்தகு மாற்றத்தை கொண்டு வர முடியும் . ஏதோவொரு டயட்டை பரிந்துரைப்பது இல்லை இது. நம்முடைய உடலுக்குத் தேவையான எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் ஒரு நாளின் எல்லா வேளை உணவிலும் சேர்க்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட டயட் என்றே இதை சொல்லலாம்.
இந்த டயட்டை ஃபாலோ செய்யும்போது ஆரோக்கியமான முறையில் கொழுப்பை எரித்து உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
பூண்டு
இந்தப் பூண்டை சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து விடும். இதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டில் விட்டமின் B6, கால்சியம், சைபர், மெக்னீசியம் இது போன்று அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கொழுப்பு நீங்கிவிடும்.
இஞ்சி
இது நம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். நான் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் பண்ண வைக்கும்.
எலுமிச்சை பழம்
இது நம் உடலை குறைக்க செய்யும் மற்றும் நம் பசியின் உணர்வை குறைக்கும். இதில் அதிகம் பொட்டாசியம் இருப்பதனால் நம்மளுடைய BP லெவலை சரியாக வைத்திருக்கும்.
செய்முறை:
1: முதலில் 4 பல் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி பிறகு அதனை செய்ய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.
2: ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அதன் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.
3: எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து அதனை சிறிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.
4: ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் பூண்டு இஞ்சி மற்றும் எலுமிச்சை பழம் அனைத்தையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கொதிக்க விடவும்.
6: பின்பு அதனை வடிகட்டி தினமும் குடித்து வந்தால் போதும்.
இதனை நாம் காலை உணவு எடுப்பதற்கு முன்பு குடிக்க வேண்டும். அதாவது இதனை குடித்த பின்பு ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது.
இதுபோன்று நாம் ஒரு வாரத்திற்கு எடுத்து வந்தால் நம் உடலில் உள்ள கொழுப்பு அனைத்தும் நீங்கிவிடும் நாம் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.