இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே தவற விடாதீர்கள்!!
தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் ஏராளமான இளைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கையில் பட்டம் இருந்தும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் தினம்தோறும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
எனவே, வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் நோக்கத்தோடு தமிழக அரசானது ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் ஏராளமான வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வேலைவாய்ப்பு முகாமினால் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகம் ஒன்று நடைபெற உள்ளது.
இதனை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊடக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இரண்டும் இணைந்து நடத்த உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமானது அவினாசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இந்த முகாமானது காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். இதனைத்தொடர்ந்து அதே ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது காலை ஒன்பது மணிக்கு துவங்கி மதியம் மூன்று மணி வரை நடைபெறும் என்றும், இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இளைஞர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமினை தவற விடாமல் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.