Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!!

Huge Grievance Camp!! Get ready people!!

Huge Grievance Camp!! Get ready people!!

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!!

தமிழகத்தில் தினம்தோறும் மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களும் முடிவுகளும் தமிழக அரசால் எடுத்துக்கொண்டே வருகின்றனர். இருப்பினும் மக்களுக்கு இருக்கின்ற சில குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் பொதுமக்களின் வழக்குகளையும், குறைகளையும் தீர்க்கும் நோக்கத்தில் சென்னை காவல் துறையின் உதவியோடு குறை தீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற உள்ளது.

இந்த முகாம் நாளை காலை 9.30 மணி அளவில் துவங்குகிறது. இது வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த குறை தீர்க்கும் முகாமில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துக்கொள்ள இருக்கிறார். இவர் இந்த முகாமில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் நிறைகளையும், குறைகளையும் கேட்டு அவர்களின் மனுவையும் பெற உள்ளார்.

இந்த முகாம் முழுக்க முழுக்க மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த குறை தீர்க்கும் முகாமில் சென்னை மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி இதில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இதுபோன்ற குறை தீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று மக்கள் அனைவரிடமும் கேட்டறிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மக்களிடையே கோரிக்கை வந்துள்ளது.

Exit mobile version