79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!! பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற கோவை அணி!!

0
166
Huge win by 79 runs!! The Coimbatore team qualified as the first team for the play-off round!!

79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!! பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற கோவை அணி!!

நேற்று அதாவது ஜூன் 27ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.

லைகா கோவை கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ராம் அரவிந்த் 22 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும், அதீக் உர் ரஹ்மான் 32 ரன்களும் சேர்த்தனர். சேலம் அணியில் பந்துவீச்சில் சன்னி சந்து 3 விக்கெட்டுகளையும் அபிஷேக் தன்வர், சச்சின் ரதி, கவுசிக் காந்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 200 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 19 ஓவர்களின் முடிவில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துது. இதனால் லைகா கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சேலம் அணியில் அதிகபட்சமாக சன்னி சந்து 29 ரன்கள் சேர்த்தார். ஆகாஷ் சும்ரா 20 ரன்களும், எஸ் அபிஷேக் 15 ரன்களும் சேர்த்தனர். லைகா கோவை கிங்ஸ் அணியில் பந்துவீச்சில் கே கௌதம் தாமரை கண்ணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாருக்கான் 2 விக்கெட்டுகளையும், எம் மொஹம்மது, எம் சித்தார்த், ஜடவேட் சுப்ரமண்யன், வள்ளியப்பன் யுதீஸ்வரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணியில்

அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் அரைசதம் அடித்த ராம் அரவிந்த் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையடுத்து ஆறு போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் 1 தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி உள்ளது. மேலும் 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.