டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு.! ஃப்ளே ஆஃப்க்கு முன்னேறுமா கொல்கத்தா.!!

0
199

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் இரண்டாவது போட்டியில் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இரண்டு வெற்றிகளை மட்டும் மட்டுமே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது எனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது எனவே 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தாவுக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக போட்டியாகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (w), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.