இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவுஜா பந்துவீச்சாளர்கள் பும்ப்ரா குறித்தும் மற்றும் ஷமி குறித்தும் அவரின் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இந்தியா நியூசிலாந்து தொடர் தோல்விக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. அதற்காக இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து தொடர் தோல்வியின் காரணமாக இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஆக வேண்டிய நிலையில் உள்ளது. மேலும் இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் க்கு முக்கியமான போட்டி ஆகும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இந்திய அணியின் பும்ரா மற்றும் ஷமி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பும்ப்ரா ஒரு சிறந்த பவுலர் மற்ற பவுலர்களை விட இவர் சற்று வேறுபட்ட பவுலர். மற்ற பவுலர்கள் வெள்ளை கோடுக்கு நேராக பந்தை ரிலீஸ் செய்வார்கள் ஆனால் இவர் சற்று முன் வந்து வீசுவார் அதனால் பந்து சற்று வேகமாக வரும்.
நான் அவருக்கு பயப்படவில்லை. அவர் பந்துக்கு நான் அவுட் ஆக மாட்டேன் என்று கூறவில்லை . அவர் நன்றாக வீசினால் நான் அவுட் ஆவேன் இல்லையென்றால் ரன்கள் குவிப்பேன். ஷமி ஒரு சிறந்த பவுலர் அவரும் சிறப்பாக பந்து வீசுவார் ஆனால் அவரை பற்றி யாரும் பேசவில்லை. அவர் அணிக்கு திரும்பினால் சிறப்பாக பந்து வீசுவார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.