ஐ பி எல் தொடரில் மிக முக்கிய வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல் இவர் இதுவரை ஐ பி எல் போட்டிகளில் 5 முறை கேப்டனாக விளையாடியுள்ளார். இதற்கு முன் பஞ்சாப் அணியில் 2 முறையும், அதன் பின் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியில் 3 முறையும் கேப்டனாக விளையாடியுள்ளார்.
பஞ்சாப் அணியில் கேப்டனாக பணியாற்றிய பின்பு அந்த அணி நிர்வாகத்துக்கும் கே எல் ராகுலுக்கும் இடையே இருந்து கருத்து வேறுபாடுகளால் அவர் அந்த அணியில் இருந்து விலகி லக்னோ அணியில் கேப்டனாக விளையாடினார். ஆனால் இங்கு அதை விட மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.
லக்னோ அணியின் உரிமையாளர் ஒரு போட்டியில் கே எல் ராகுலை காலத்தில் வைத்து கடுமையாக சாடினார். அது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இதனால் இந்த முறை அந்த அணியில் அவர் தக்க வைக்க படவில்லை . இந்த முறை அவர் நடைபெறும் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.
மேலும் கேப்டன்சி பற்றி பேசிய அவர் நான் கேப்டன்சிகாக யாரிடமும் கெஞ்சுவதில்லை, மேலும் கேப்டன்சி இருந்தால் தான் விளையாடுவேன் என்று இல்லை. உங்களுக்கு எனக்கு அந்த பொறுப்பு கொடுக்க விருப்பபட்டால் அதனை ஏற்று விளையாடுவேன். அதுமட்டுமல்லாமல் தொடக்க வீரர் என்று இல்லாமல் கீப்பர், பீல்டர், இரண்டாவது அல்லது ஃபினிசர் என்று எந்த ரோல் மற்றும் எந்த வரிசையில் களமிறக்கினாலும் நான் விளையாட தயார் என்றும் கூறியுள்ளார்.