Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!!

#image_title

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!!

நேற்றைய(நவம்பர்6) போட்டியில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் அஞ்சலோ மேத்யூஸ் மைனதானத்திற்குள் தாமதமாக வந்ததற்காக நடுவர் அவுட் கொடுத்த நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. தற்பொழுது இது குறித்து அஞ்சலோ மேத்யூஸ் வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று(நவம்பர்6) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் மோதியது. இதில் இலங்கை அணி பேட்டிங் செய்வதற்காக அஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்பொழுது அவர் வந்தவுடன் ஒரு பந்து கூட எதிர் கொள்ளாத நிலையில் நடுவர் அவர்கள் அஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்குள் தாமதமாக வந்தததாக கூறி அவுட் கொடுத்து வெளியே அனுப்பினார். இந்த நிகழ்வு பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வருகின்றது.

அதாவது நேற்று(நவம்பர்6) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 24.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் அஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்வதற்கு களமிறங்கினார். அப்பொழுது இலங்கை பேட்ஸ்மேன் அஞ்சலோ மேத்யூஸீ அவர்கள் 2 நிமிடத்திற்குள் மைதானத்திற்கு வரவில்லை என்று டைம் முறையில் வங்கதேச வீரர்கள் அப்பீல் செய்தனர்.

வங்கதேச வீரர்கள் அப்பீல் செய்யவே நடுவர்களும் அவுட் கொடுத்தனர். இருப்பினும் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் அஞ்சலோ மேத்யூஸ் இருவரும் நடுவர்களிடம் முறையிட்டனர். பின்னர் இந்த பிரச்சனை மூன்றாம் நடுவர்களுக்கு சென்றது.

மூன்றாம் நடுவர்கள் வீடியோ மூலமாக பரிசோதனை செய்து பார்த்தனர். அப்பொழுது அஞ்சலோ மேத்யூஸ் 2 நிமிடத்திற்குள் மைதானத்திற்கு வரவில்லை என்று மூன்றாம் நடுவர்களும் அஞ்சலோ மேத்யூஸ் அவர்களுக்கு அவுட் கொடுத்தனர். இந்நிலையில் அஞ்சலோ மேத்யூஸ் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு நடுவர்கள் தவறான முடிவு வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அஞ்சலோ மேத்யூஸ் இது குறித்து அந்த வீடாயோவில் “2 நிமிடத்திற்குள் நான் களத்திற்கு வந்துவிட்டேன். நான் 5 வினாடிகளுக்கு முன்பாகவே மைதானத்திற்குள் வந்துவிட்டேன். இது தொடர்பான வீடியோ என்னிடம் உள்ளது. என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் எதிர் அணி இப்படி நடந்துகொண்டதை நான் பார்த்தது கிடையாது” என்றும் கூறியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய(நவம்பர்6) போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக உலகக் கோப்பை தெடரில் இருந்து மூன்றாவது அணியாக இலங்கை அணி வெளியேறியுள்ளது.

Exit mobile version