நான் ஒன்றும் ரோபோ கிடையாது

0
125
இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் திடீர் பவுன்சராகவும், அதிவேகமாகவும் பந்து வீசக்கூடியவர். ஆனால் மான்செஸ்டரில் அவரின் தீப்பொறி பந்து வீச்சை காண இயலவில்லை.
59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நாங்கள் நினைத்த மாதிரி ஆட்டம் சென்றதாக நினைக்கவில்லை. எங்களுடைய ஏராளமான பந்துகள் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியது. ஒவ்வொரு நாளும் மணிக்க 90 மைல் வேகத்தில் பந்து வீச இயலாது. யாரும் ரோபோ கிடையாது.
இந்த ஆடுகளம் பந்தை பவுன்ஸ் செய்வதற்கானதாக இருக்கவில்லை. காலையில் மற்றும் சற்று ஒத்துழைத்தது. அதன்பின் பந்து டர்ன் ஆக ஆரம்பித்தது’’என்றார்.