Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் பிடிக்கும் தல தோனி.. காரணம் என்ன தெரியுமா?

I prefer Instagram M S Dhoni

MS Dhoni: சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 103.8 துபாய் ஐ என்ற youtube சேனல் நிகழ்ச்சி ஒன்றில் தோனி மற்றும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிஎஸ்கே வீரர் தோனி கருத்துக்களையும், சிஎஸ்கே அணியையும்  பற்றி பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர் எனக்கு டிவிட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் பிடிக்கும் என்று கூறினார். அவர் கூறியதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் டிவிட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் பிடிக்கும். ஏனெனில் ட்விட்டரில் எந்த ஒரு நல்ல விஷயங்களையும் பார்க்க முடியாது. அவ்வாறு வந்தாலும் அந்த விஷயங்களை பெரிதாக்கி சர்ச்சையாக தான் போய்க்கொண்டு இருக்கும். குறிப்பாக இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுகிறது. ஆனால் இன்ஸ்டாகிராம் அப்படி இல்லை. இன்ஸ்டாகிராம் பாெறுத்தவரை நாம் ஏதாவது போஸ்ட் செய்தாலும் அதற்கான விமர்சனங்களும், கருத்துக்களும், டிவிட்டர் அளவிற்கு சர்ச்சையாக வராது.

இருந்தபொழுதும் நான் இன்ஸ்டாகிராமில் அவ்வளவாக ஆக்டிவாக இருப்பதில்லை. என் ரசிகர்களுக்காக அவ்வப்போது வீடியோவையும், புகைப்படத்தையும், ஒன்று அல்லது இரண்டு பதிவிடுவேன். அப்பொழுது என் ரசிகர்கள் சந்தோசமாக கருத்து பதிவிட்டு செல்வார்கள். அதனால் தான் எனக்கு இன்ஸ்டாகிராம் பிடிக்கும் என்று இன்று துபாய் ஐ 103.8 youtube சேனல் நிகழ்ச்சியில் தோனி பேசியுள்ளார்.

மேலும் தோனி மற்ற கிரிக்கெட் வீரர்களை போல் அல்லாமல் இவர் சமூக வலைதளங்களில் சற்று மறைந்தே தான் காணப்படுகிறார். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடர்களில் மட்டும் தான் காணப்படுகிறார். அதன் பிறகு இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக காணப்படுவதில்லை.

மேலும் அவர் instagram-யில் 48 மில்லியன் பாலோவர்களையும் ட்விட்டரில் 8 புள்ளி 2 மில்லியன் பாலோவர்களையும் கொண்டுள்ளார். இறுதியாக இவர் டிவிட்டரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: 2025 ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்.. தல தோனி ஓய்வு குறித்து அசத்தல் முடிவு!! 

Exit mobile version