Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் வலிமையையும் மன வலிமையையும் பெற்று வருவேன்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திராலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இந்த ஐந்து அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. ஆனால் மீதமுள்ள அணிகள் தகுதி பெறுவதற்கு முன்னதாகவே கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் அனைத்தும்  தள்ளிப்போனது தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் உலக கோப்பை 2022 க்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்திய நட்சத்திர வீரங்கனையான மிதாலிராஜ் இந்த உலக கோப்பை பின் ஒய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டியுள்ளது.  இதுகுறித்து மிதாலிராஜ் தனது ட்விட்டரில் நான் உலகக்கோப்பையை நோக்கித்தான் பயணித்து கொண்டு இருக்கிறேன் இந்த போட்டியில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன் அதற்காக  உடல் வலிமையையும் மன வலிமையையும் பெற்று வருவேன் என்று கூறியுள்ளார்.

Exit mobile version