ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை தக்க வைக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் வெளியிடப்படுகிறது அந்த பட்டியலில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தர வரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர்-1 இடத்தை உறுதி செய்துள்ளது தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி (118) புள்ளிகளுடன் உள்ளது.
ஆஸ்திரேலியா அணி 113 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் 3.14 புள்ளிகள் கூடுதலாக பெற உள்ள இங்கிலாந்து மூன்றாவது இடத்தை பிடிக்க உள்ளது. தற்போது 8-வது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2002 பின் முதன்முறையாக தரவரிசையில் 5-வது இடத்தை பிடிக்க உள்ளது.
ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இங்கிலாந்து தொடரை 2 க்கு 1 என்ற என்ற கணக்கில் வென்ற போது 3.69. புள்ளியை இழந்த இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி 6.12 புள்ளியை இழப்பதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகிறது. நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளது இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி இடம்பெறும்.
பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது இதில் முதலிடத்தில் விராட் கோலி பிடித்துள்ளார், இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் சிமித், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன், நான்காவது இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர் ஆறாவது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த புஜாரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்