Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெற்றிக்கு பின் 19 புள்ளிகளை குறைத்த ஐசிசி !! உச்சகட்ட கோபத்தில் பென் ஸ்டோக்ஸ்!!

ICC dropped 19 points after the win

ICC dropped 19 points after the win

cricket: இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் புள்ளிகளை குறைத்த ஐசிசி கண்டனம் தெரிவித்த ஸ்டோக்ஸ்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் க்கு நியூசிலாந்து அணி போராடி வரும் நிலையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளிலும் மெதுவாக பந்து வீசியதற்கு புள்ளிகள் குறைக்கப்பட்டது.

இரு அணி வீரர்களுக்கும் மெதுவாக பந்து வீசியதற்காக ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி. மேலும் போட்டியின் முடிவுக்கு பின் புள்ளிகள் குறைக்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் மட்டும் இதற்காக இங்கிலாந்து அணி 19 புள்ளிகளை இழந்துள்ளது.

இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்  ஐசிசி மீது கண்டனம் தெரிவித்து இன்ச்டக்ரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போட்டியானது நான்காம் நாளே முடிவடைந்தது. 5 நாள் நடைபெறும் போட்டியானது 4 நாள் முடிவடைந்தது. ஆனாலும் புள்ளிகள் குறைக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது போட்டியானது குறிப்பிட்ட 10 நேரத்திற்கு முன்னரே முடிந்து விட்டது எனினும் புள்ளி குறைக்கப்பட்ட விதி ரொம்ப நல்லது என்று பதிவிட்டுள்ளார். இதுபோன்ற விதியில் மட்டும் இங்கிலாந்து அணிக்கு இதுவரை 22 புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version