Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி20 உலகக் கோப்பை அணிகளின் அட்டவணை வெளியீடு! இந்தியாவின் பரம எதிரியும் ஒரே பிரிவில் இடம் பெற்று இருப்பது அதிசயம் தான்!

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பிரிவுகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. பிசிசிஐ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.இதில் சூப்பர் 12 சுற்றில் பி பிரிவில் இந்திய அணி இடம் பெற்றிருக்கிறது. இந்த பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், போன்ற அணிகளும் இடம் பிடித்திருக்கின்றன..

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதே பி பிரிவில் இந்தியாவின் பரம எதிரியாக காணப்படும் பாகிஸ்தான் அணியும் இடம்பெற்று இருப்பதுதான் இதனால் ரசிகர்கள் விவரிக்க முடியாத ஒரு மனநிலையில் இருந்து வருகிறார்கள். என்று தெரிவிக்கப்படுகிறது.

எப்படி பார்த்தாலும் பாகிஸ்தான் அணியுடனான போட்டி இந்தியாவிற்கு சாதகமாக தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு பாகுபாடும் இல்லை. அதேபோல ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியுடனான மோதலின்போது சற்றே இந்தியா நிதானத்துடன் செயல்படுவது நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி உடனான போட்டியின்போது எந்த ஒரு சிக்கலும் இந்தியாவிற்கு இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version