ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! பந்துவீச்சு பட்டியலில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?

Photo of author

By Sakthi

தற்சமயம் டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டரின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது.

பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் மார்னஸ் லபுசேன் முதலிடம் பிடித்திருக்கிறார். இந்திய வீரர்களில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 6வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். விராட் கோலி 9வது இடத்திலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும், இருக்கிறார்கள்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். இந்திய வீரர் அஸ்வின் 2வது இடத்திலுள்ளார். 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா இருக்கிறார். இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 4வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் முதலிடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திலும், அஸ்வின் 3வது இடத்திலும், நீடிக்கிறார்கள்.

Exit mobile version