Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

#image_title

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு
2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு. முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் மோதல்.
இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி அஹமதாபாத்தில் தொடங்குகின்றது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் உலகக்கோப்பை தொடர் இந்த வருடம் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகின்றது.
#image_title
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றது. மீதம் உள்ள இரண்டு இடங்களுக்கு தற்பொழுது தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்த போட்டி அக்டோபர் மாதம் 8ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு அணியும் 9 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா அணி விளையாடவுள்ள 9 போட்டிகள் சென்னை, புனே, அஹமதாபாத், டெல்லி, தர்மசாலா, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ ஆகிய ஒன்பது மைதானங்களில் நடைபெறவுள்ளது.
 இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8ம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா போட்டியும், அக்டோபர் 14ம் தேதி நியூசிலாந்து வங்கதேசம் போட்டியும், அக்டோபர் 18ம் தேதி நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் போட்டியும், அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போட்டியும் அக்டோபர் 27ம் தேதி பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா போட்டியும் நடைபெறவுள்ளது.
2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மும்பையில் நவம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16ம் தேதி நடைபெறவுள்ளது. 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. அதே இரண்டு அணிகள் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரின் தொடக்கப் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version