Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திட்டமிட்டபடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும்! ஐசிசி உறுதி!

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிபோட்டியானது இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் நகரில் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருக்கிறது.முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசி போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் நகரில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. டெஸ்ட் போட்டி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்திருக்கின்ற இந்தியா, நியூசிலாந்து, ஆகிய அணிகள் இதில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், இப்போட்டி நடப்பதில் திடீரென்று சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இருக்கும் தங்கள் நாட்டை சாராத மற்ற நபர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றை திட்டமிட்டபடி நடத்துவோம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதிபட தெரிவித்து இருக்கிறது.

இந்த நோய் தொற்றிற்கு இடையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு பாதுகாப்பாக நடத்தமுடியும் என இங்கிலாந்து கிரிகெட் வாரியமும் மற்ற நாடுகளுடைய வாரியமும் நடத்திக்காட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.ஆகவே திட்டப்படி இங்கிலாந்து நாட்டில் ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும்.எனவும், இதுதொடர்பாக இங்கிலாந்து அரசிடம் ஆலோசனை செய்து வருவதாகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

Exit mobile version