இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நிறைவுற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது பெங்களூருவில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியின் ஆரம்பம் முதலே 2 அணிகளும் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 39 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி பிங்க் நிற பந்தை கொண்ட 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்த தொடரில் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்து 2 -0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருக்கிறது.
அதனடிப்படையில், 77 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது, 66 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2வது இடத்திலும், 60 சதவீத வெற்றியுடன் தென்ஆப்பிரிக்க அணி 3-வது இடத்திலுமிருக்கிறது.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதன் மூலமாக இந்த பட்டியலில் 58 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது 50 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி 5வது இடத்தில் நீடித்து வருகிறது 38 சதவீத வெற்றியுடன் நியூசிலாந்து அணி 6வது இடத்திலிருக்கிறது.