பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம்! பிரபலத்தின் பல நாள் ஆசை நிறைவேறியது!
பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.இவர் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்றவர் ஆவார்.இவர் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.பிரதமர் மோடி ஜூலை மாதம் இந்திய சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற வீரர்,வீராங்கனைகளிடம் கானொளியில் பேசினார்.
இதில் அவர் பிவி சிந்து 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கிற்கு முன்பு தன்னுடன் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.அவரின் ஆசையை அடுத்த முறை நிறைவேற்றுவதாக மோடி பிவி சிந்துவிடம் கூறியிருந்தார்.இதனையடுத்து பிரதமர் மோடி பிவி சிந்து கடின பயற்சியை மேற்கொண்டுள்ளதாலும் டயட்டில் இருப்பதாக தெரிவித்ததாலும் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக உறுதியளித்தார் மோடி.
பிவி சிந்து அதிகம் ஐஸ்கிரீம் சாப்பிடாதவர் ஆனாலும் மோடியுடன் ஒரு முறை ஐஸ்கிரீம் சாப்பிடுவதை விரும்புவதாகவும் கூறினார்.இதனால் இன்று நடந்த பாராட்டு நிகழ்வில் மோடி பிவி சிந்துவின் ஆசையை நிறைவேற்றினார்.பிவி சிந்து மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு மகிழ்ந்தார்.பிவி சிந்து பல நாள் விருப்பத்தை நிறைவேற்றிய மோடிக்கு நன்றி தெரிவித்தார்.முன்னதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் காலை உணவும் அருந்தினார் பிரதமர் மோடி.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி,அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.இவரின் சுதந்திர தின உரையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் இனி வரும் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்றும் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.