டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் நான்கு போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று அரை இறுதி போட்டியை சற்றேறக்குறைய உறுதி செய்து விட்டது கடைசி லீப் போட்டியில் நாளை ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்தியா தான் லீக் சுற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.
இந்திய அணியின் இந்த அபார வெற்றிகளுக்கு முக்கிய காரணம் விராட் கோலி தான் இவர் கடந்த 2 வருட காலமாக சரியான ஃபார்மில் இல்லாததால் ஆசிய கோப்பை டி20 உலகக் கோப்பை தொடர்களில் இவரை சேர்க்கக்கூடாது என்று பலர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள் இந்த நிலையில் தான் ஆசிய கோப்பையில் சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விராட்கோலி.
அத்தோடு தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் அபாரமாக விளையாடி அணியை அரையாவதற்கு அழைத்துச் சென்றுள்ளார் 4 போட்டிகளில் 220 ரன்கள் அடித்து இந்த உலகக் கோப்பையில் அதிக ரண்களை குவித்து ஒரு பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் 1065 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார்.
மேலும் விராட் கோலி இதுவரையில் 71 சதங்களை அடித்துள்ளார். அதில் ஆஸ்திரேலியா மைதானத்தில் தான் அதிகபட்சமாக 5 சதங்களை அடித்திருக்கிறார். சொந்த மண்ணில் கூட அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் 4 சதங்களை மட்டுமே அடித்திருக்கிறார். அந்த அளவுக்கு ஆஸ்திரேலியா கோலிக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அடிலைட் மைதானம் தான் அவருக்குப் பிடித்த மைதானமாக இருக்கிறது.
இந்த மைதானத்தில் கோழி 14 ஆட்டங்களில் 5 சதங்கள் மூன்று அரை சதங்கள் உட்பட 94 ரன்கள் குவித்திருக்கிறார் இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் தோனி காயம் காரணமாக விலகியதால் கோழி தான் கேப்டனாக செயல்பட்டார் இரண்டு இன்னிங்ஸிலும் 115 மற்றும் 141 என சதம் அடித்து அசத்தினாள் கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்கதேசத்திற்கு எதிராக இங்கே கோழி 64 ரன்களை குவித்து ஆட்டமெலக்காமல் இருந்து ஆட்டநாயகன் வருவதைப் பெற்றார்.
அதன் பிறகு பேட்டி அளித்த அவர் அடிலய்டில் விளையாடுவதை என்னுடைய சொந்த ஊரில், சொந்த மைதானத்தில் விளையாடுவதை போல உணர்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு இங்கே பல சாதனைகளை அவர் புரிந்து இருக்கிறார்.
விராட் கோலி எப்படி அடிலைட் மைதானத்தில் அதிரடி காட்டுவது தொடர்பாக 2016 ஆம் ஆண்டு பேசி இருந்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு பிரபல வீரர் ஒரு மைதானத்தில் தொடர்ந்து ரண்களை குவித்து சாதனைகளைப் படைத்திருந்தால் அந்த மைதானத்தின் ஒரு பகுதிக்கு அந்த வீரரின் பெயரை வைப்பார்கள் அந்த விதத்தில் அடிலைடில் அபாரமான திறமையை வெளிப்படுத்தி வரும் கோலிக்கு இந்த மைதானத்தின் ஒரு பெவிவிலியனுக்கு கோலியின் பெயரை வைப்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.
தோனி தெரிவித்ததைப் போலவே தற்போது வரையில் கோலி அங்கே அதிரடியாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக, அடிலைடில் ஒரு பெவிலியனுக்கு கோலியின் பெயரை வைக்க வாய்ப்புள்ளது. எந்த நாட்டு மைதானத்தின் பெவிலியனுக்கும் வெளிநாட்டு வீரரின் பெயரை வைத்ததில்லை. கோலிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சச்சின் 3300 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால் அவரை விட கோலி தான் அதிக ரன்களை அடித்திருக்கிறார் கோலி ஆஸ்திரேலியாவில் இதுவரையில் 3350 ரன்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.