Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!!

In any case, Anil Balaji is very strict.. 50 thousand for 1 Tasma!! Evidence video released!!

In any case, Anil Balaji is very strict.. 50 thousand for 1 Tasma!! Evidence video released!!

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!!

தமிழகம் தான் மற்ற மாநிலங்களை விட மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இது பெருமை படக்கூடிய தகவல் இல்லை என்றாலும் ஒரு பக்கம் இது பல குடும்பங்களின் சூழலையே மாற்றி வருகிறது.அதிமுக இருந்த காலத்திலாவது மது விற்பனை நேரம் குறைப்பு என ஆரம்பித்து பூரண மது விலக்கு கொண்டு வரவில்லை என்றாலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடையில் வாங்கும் மதுபானம் என தொடங்கி அனைத்திற்கும் கமிஷன் மேல் கமிஷன் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அரசு நாட்களில் கூட சிலரின் ஒப்புதலோடு பிளாக்கில் மதுபானங்களை விற்று வருவது நடக்கிறது. எந்தெந்த எல்லையை பிடிப்பதற்கோ குறிக்கோள் வைக்கும் நிலைமை கடந்து தற்பொழுது இந்த ஆட்சியானது மது விற்ப்பனையில் டார்கெட் வைத்துள்ளது.அந்தவகையில் கடந்த பண்டிகையில் இவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு டார்கெட் கொடுத்தது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது.

இவ்வாறு ஆளும் கட்சியானது மது விற்பனையை ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்தி வருவதால் மதுப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் ஊழியர்கள் மேற்கொண்டு மதுபானத்திற்கு ஏற்ப காசை பெற்றுக் கொண்டு சில்லறை தருவதில்லை என்ற புகார்களும் வாடிக்கையாளர்களிடம் இருந்து எழுந்த வண்ணமாக தான் உள்ளது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர் ஒருவர் ஊழியரிடம் இனி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என கரூர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அந்த வீடியோவும் தற்பொழுது வெளிவந்து வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவானது தற்பொழுது பாஜக ஐ டி விங் தலைவராக இருந்து அதிமுகவில் இணைந்துள்ள சி டி ஆர் நிர்மல் குமார் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version