டிகிரி முடித்திருந்தால் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகை!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

0
92
incentive-up-to-20-thousand-for-degree-completion-tamil-nadu-governments-strange-announcement

டிகிரி முடித்திருந்தால் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகை!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல மகிழ்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசானது தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதோடு போனஸ் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசும் 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது.

இந்த அறிவிப்பானது அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சி மற்றும் டி பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் கருணைத்தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநில அரசானது தற்பொழுது மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பனிக்காலத்தில் கூடுதல் கல்வி தகுதியை பெற்றிருந்தால் ஊக்கத்தொகை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இது தமிழகத்தில் செயல்படாமல் ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது இது குறித்த அறிவிப்பை தமிழக அரசானது கடந்த மாதம் ஏழாம் தேதி வெளியிட்டது.

அதன்படி அரசு பணியில் இருப்பவர்கள் தங்களின் அடுத்த கட்ட நகர்வாக கூடுதல் கல்வி தகுதி பெற்றிருந்தால் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினர். அந்த வரிசையில் அரசு ஊழியர்கள் முனைவர் படிப்பு முடித்து இருந்தால் 25 ஆயிரம் வரையும், பட்டம் மேற்படிப்பு படுத்திருந்தால் 20 ஆயிரம் வரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்து இருந்தாலும் பத்தாயிரம் வரை வழங்குவதாக கூறியுள்ளனர்.

இந்த ஊக்கத் தொகையானது தற்பொழுது பணிபுரிந்து கொண்டிருக்கும் வேலைக்கு இணையானதாகவோ அல்லது இந்த மேற்படிப்பானது அடுத்த கட்ட பதவிக்கு  எடுத்து செல்வதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனை தவிர்த்து அவர்கள் பணிபுரிய கட்டாயம் அந்த தகுதி தேவைப்படும் பட்சத்தில் மேற்படிப்பு படித்திருந்தால் அவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இவ்வாறு கூடுதல் கல்வி தகுதி பெற்றுள்ளவர்கள் முதல் ஆறு மாதத்துக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.மாநில அரசின் இந்த அறிவிப்பானது அரசு ஊழியர்களிடையே அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.