கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மாஸ்க் போடுவது கட்டாயம் – அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம்
சென்னை : நாடெங்கிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் மாஸ்க் அணிந்து செயல்படுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேரவையில் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு :
கொரோனா வைரஸ் ஆனது 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்தது. அதுவே நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் பல உயிர் சேதங்களை ஏற்படுத்தியது. தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசு திணறியது. 144 தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் டோஸ்கள் போடப்பட்டன. 2021 ஆம் ஆண்டு வரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சீரான நிலைக்கு திரும்பியது.
மாஸ்க் கட்டாயம் :
தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை துவங்கி வைத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் நாட்டில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் தொற்றால் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இன்று மட்டும் 3000ஐ கடந்துள்ளது.
இதனால் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 13000 லிருந்து 15000 ஐ கடந்துள்ளது. இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,69,711 பேர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,867 பேர். இதுவரை 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கடந்த ஒரு நாளில் மட்டும் 6553 டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் விதமாக அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவர்கள் ,ஊழியர்கள், நோயாளிகள் அனைவரும் 100% மாஸ்க் அணிய வேண்டும் என்றும் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.