Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது!

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இருக்கின்ற டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்றையதினம் தொடங்குகிறது.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை ஆரம்பிக்குமா என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் நடந்த ஐசிசி உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதி தோல்வியுற்றது இந்தியாவுக்கு இதன் காரணமாக இங்கிலாந்திற்கு எதிராக மிக திறமையுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த போட்டிக்கான 11 வீரர்களை தேர்வு செய்தது தொடர்பாக கேப்டன் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது சுப்மன் கில் காயமடைந்ததன் காரணமாக, அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் பயிற்சியின்போது அகர்வால் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இதன் காரணமாக, அவர் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

நடு வரிசையில் புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், உள்ளிட்டோர் இருக்கிறார்கள். அதேபோல ரகானே உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது சந்தேகமே. அவர் விளையாடாவிட்டால் விகாரிக்கு வாய்ப்பு அளிக்கப்படும். சுழற்பந்து வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகம்மது ஷாமி ,இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோரும் இடம்பெறுவார்கள். முகமது சுராஜ் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது.

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்து நாட்டில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது அதன் பின்னர் விளையாடிய 3 தொடரிலும் தோல்வியை சந்தித்தது கடைசியாக 2018-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் டெஸ்ட் தொடரை 1.4 என்ற கணக்கில் இழந்தது 14 வருடங்களுக்குப் பின்னர் அங்கு தொடரில் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி பிப்ரவரி மார்ச் மாதங்களில் சொந்த மண்ணில் இங்கிலாந்தில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் விழித்திருந்தது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி அந்த நாட்டு மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்து அணியிடம் தொடரை இழந்து இருக்கிறது. அதோடு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாட வில்லை என்று சொல்லப்படுகிறது.

இரண்டு அணிகளும் இன்றைய தினம் மோதுவது 127 வது டெஸ்ட் போட்டி என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் நடைபெற்ற 126 போட்டியில் இந்திய அணி 29 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 48 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது 49 போட்டி டிராவில் முடிந்து இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை மூன்று முப்பது மணி அளவில் ஆரம்பமாகிறது சோனி டெலிவிஷன் சேனல்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Exit mobile version