விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கிறது.
7 நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் அந்த வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டது. அந்த டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது இதனையடுத்து லண்டன் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதோடு தொடரிலும் 1 க்கு 0 என்ற என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் இருக்கின்ற ஹெட்டிங்லே மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் ஒன்பதாவது விக்கெட்டிற்கு பும்ராவும், முகமது சமியும், ஒன்றிணைந்து 89 ரன்கள் எடுத்தது. மாற்றத்தின் போக்கையே மாற்றி இருந்தது. இதனைத் தொடர்ந்து 272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியை அதே வேகத்துடன் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சந்தித்ததால் 120 ரன்னில் ஆட்டம் இழக்கச் செய்தார்கள்.
இந்தியாவிற்கு நடுவரிசை பேட்டிங் தான் கவலையான நிலையில் இருக்கிறது. கேப்டன் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக 2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். நீண்டகால சபை இயக்கத்தை இந்த டெஸ்டின் மூலமாக கூறி முடிவுக்கு கொண்டு வருவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். புஜாரா , துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே, உள்ளிட்டோரின் மிக மந்தமான மாற்றத்திற்கும் விமர்சனம் இருந்துவருகிறது. அவர்களும் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மாவும், மிக வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தொடரில் இந்தியா முன்னிலை பெற்றதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ரோகித் சர்மாவை பொருத்தவரையில் பவுன்சர் பந்துகளை ஷாட்டாக அடிக்கும்போது கூடுதல் கவனம் தேவைப்படும். அந்த விதத்தில் அவர் இரண்டு முறை தன்னுடைய விக்கெட்டை இழந்து இருக்கின்றார்.வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே இந்த ஆடுகளத்தில் நிலவும் என கணிக்கப்பட்டு இருப்பதால் இந்திய அணியின் நான்கு வேகப்பந்து மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற விதியில் மாற்றம் செய்யாது என சொல்லப்படுகிறது.
லாட்ஸ் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சுராஜின் ஆக்ரோஷமான பந்து வீச்சு 8 விக்கெட் வீழ்த்தியது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தது. இன்றைய தினத்திலும் அவருடைய மாயாஜாலம் தொடர்ந்தால் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. இதுவரையில் 22 டெஸ்ட் போட்டியில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்ற பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற ஒரு சாதனையை அவர் தன் வசம் ஆக்க முடியும்.