மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

0
119

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 208 என்ற இலக்கை 18.4 ஓவர்களில் இந்திய அணி சிக்சர் அடித்து வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டு சாதனைகளை இந்திய அணி படைத்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. முதலாவது சாதனையாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று 94 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச டி20 போட்டிகளில் ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றதும் நேற்றைய போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்திய அணி 208 என்ற இலக்கை நோக்கி விளையாடி 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதற்கு முன் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற டி20 போட்டியில் 207 என்ற இலக்கை நோக்கி விளையாடி வெற்றி பெற்றதே இந்திய அணியின் அதிகபட்ச சேஸ் வெற்றியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 சாதனைகளுடன் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது