இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்ட இந்திய அணி!

0
177

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கின்ற மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதன் மூலமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. தென்ஆப்பிரிக்க அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது, நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த சூழ்நிலையில், 2வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதற்கு இந்தியாவிற்கு 8 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்க அணிக்கு 122 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், நேற்றையதினம் மழையால் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் தொடங்க வேண்டிய ஆட்டம் தடைபட்டது.

இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் விழுத்தியது 243 ரன்கள் எடுத்த சூழ்நிலையில், தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, டெஸ்ட் தொடர் சமநிலையை அடைந்தது.

கடந்த 2018 ஆம் வருடம் இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது அந்த போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11ம் தேதி ஆரம்பமாகிறது, சென்ற போட்டியில் இடம் பெறாத விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.