Captain Rohit Sharma: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறது. எனவே இந்தய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர். அதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைய சில காரணங்களை கூறி இருக்கிறார். இந்த தோல்வி ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது. தோல்விக்கு குறிப்பிட்ட ஒரு காரணம் எதுவும் கிடையாது. நாங்கள் சரியாக விளையாடவில்லை, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது பார்ட்னர்ஷிப் தேர்வு செய்தது தான் எனக் கூறினார்.
மேலும், இந்திய வீரர்கள் சரிவர பவுலிங் செய்ய வில்லை. பும்ராவை பொறுத்தவரை அவரின் முழுமையான திறைமை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு சக வீரர்களின் உதவி கைகொடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிதிஷ் குமார் ரெட்டி விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் மைதானம் மிகவும் சவாலாக இருந்தது எனக் கூறினார்.
இந்தியாவின் இந்த தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது எனத் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு முன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியா சாம் கான்ஸ்டாஸ் இடையே மோதல் ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.