இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் 12 வருடங்களுக்கு பின்னால் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை இந்தியா இழந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில் சுழலுக்கு சாதகமான பூனேவில் நடைபெற்ற 2-வது போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய மூத்த ஸ்பின்னர்கள் எதிர்பார்த்த அளவு தங்கள் பங்களிப்பை அளிக்கவில்லை. ஆனால் இளம்வீரர் வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு தன்னால் முடிந்த அளவு போராடினார்.
இதையடுத்து 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் குல்திப் யாதவ் விளையாடுவது அவசியம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதைப்பற்றி அவர் கூறுகையில் ஸ்பின் நமது அணியின் பலம் என கருதுகிறோம். ஆனால் சுழல் பந்துகளை நன்றாக வீசுகிறோமா? என்பது கேள்விக்குறி.
2-வது தொடரில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அவருடைய செயல்பாடு சரியானது என பாராட்டினாலும் அணியின் வெற்றிக்காக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தங்களது பங்களிப்பை அளிக்கவில்லை எனவே அவர்களைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே வங்காளதேச தொடரில் தொடர் நாயகன் விருதினை பெற்றவர் அஸ்வின். இவர் வயதான ஸ்பின்னர் இவர்களைப் போன்ற மூத்த ஸ்பின்னர்களுக்கான மாற்றம் வரும் பொழுது சில கேள்விகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. அஸ்வின் எப்பொழுதும் முதலாவதாக செல்ல வேண்டும். அவர் அதிக வயது உள்ளவர். ஜடேஜாவும் வயதானவராக இருந்தாலும், அவர் கொஞ்சம் இளமையாகவும் ஃபிட்டாகவும் இருப்பதால் இன்னும் நீண்ட காலம் அணியில் இருப்பார்.
இவர்களை மட்டுமே நம்பி விடாமல் புதியவர்களையும் வளர்க்க வேண்டும். இதற்காக வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பு கொடுத்தது நல்ல முயற்சியாகும். அதேபோல் குல்தீப் யாதவுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. புதிய பேட்ஸ்மேன்கள் அவரைப் போன்ற மணிக்கட்டு ஸ்பின்னருக்கு எதிராக எளிதில் வீழ்வது உறுதி. ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் காயம் காரணமாக சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனாலும் அவர் லேசான காயம் இருந்த பொழுதிலும் மும்பையில் நடைபெறும் 3-வது போட்டியில் விளையாடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.