Cricket: வான்கடே மைதானத்தில் பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கும், இதுவரை நடந்த போட்டிகளின் விவரம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானமானது பேட்டிங் செய்ய சாதகமாக அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய மற்றும் நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் 12 வருட இந்திய அணி சாதனையை முறியடித்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக முதல் போட்டியானது மழை காரணமாக வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது போட்டி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. நடக்கவிருக்கும் மூன்றாவது போட்டி வான்கடே மைதானத்தில் ஆட்டத்தின் முதல் நாள் பேட்டிங் க்கு சாதகமாகவும் அடுத்தடுத்த நாள் படிப்படியாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யும் முதலில் 400 ரன்கள் சேர்க்கும் அணி போட்டியை வெல்லும். இந்திய அணி இதுவரை வான்கடே மைதானத்தில் 26 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 12 வெற்றி, 7 தோல்வி மற்றும் 7 டிரா செய்துள்ளது.