இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்!

0
139

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோதுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின.

இதையடுத்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் மோத உள்ளன. இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அடுத்த சுற்றுக்கு இரு அணிகளுமே தகுதி பெற்றால் மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை மோத வேண்டிய சூழல் ஏற்படலாம்.

இந்த போட்டியைக் காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் மைதானத்துக்கு சென்று பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளன. இதையடுத்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டிக்கு நேற்று அதிகாலை முதல் டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாக தொடங்கியது. ஆனால் அதிகப்படியான பயனர்களால் இணையதளம் ஹேங்க் ஆனதாக சொல்லப்படுகிறது.  இதையடுத்து சிறிது நேரத்தில் சீராகி மொத்த டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.