Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு போட்டியில் இத்தனை முறை தடையா..இந்தியா vs ஆஸ்திரேலியா!! நிதானம் காத்த ராகுல் ஜடேஜா!!

India vs Australia

India vs Australia

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் 9 முறை குறிக்கிட்டு நிறுத்திய மழை.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியானது நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இதனால் இந்த மூன்றாவது போட்டியின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

இந்த மூன்றாவது போட்டி 14 ம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரை 9 முறை குறுக்கிட்டு போட்டி தடைபட்டுள்ளது. முதல் நாள் போட்டியில் 13 ஓவர்களில் போட்டி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளில் தொடங்கி ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாளில் 54 ரன்களுடன் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதில் தொடக்க வீரர் மட்டும் விட்டுகொடுக்காமல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின் ஜடேஜா களமிறங்கினார் இவர்களின் இணை அணிக்கு வெகுவாக ரன் செர்த்தது . கே எல் ராகுல் 84 ரன்களும் ஜடேஜா 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா பேட்டிங் செய்து இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது.

Exit mobile version