முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்தியா மற்றும் வங்கதேசம் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்தப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று 106 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபார சதம் காரணமாக 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விராட் கோலியின் 136 ரன்களூம், புஜாரே 55 ரன்களும், ரகானே 51 ரன்கள் எடுத்திருந்தனர்
இந்த நிலையில் 245 ரன் பின்தங்கியிருந்த வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது விளையாடி வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 4 விக்கெட்டுகளை 40 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இன்னும் 201 ரன்கள் பின்தங்கிய நிலையில் கையில் 6 விக்கெட்டுகள் மட்டுமே வைத்திருக்கும் வங்கதேச அணி, இன்னிங்ஸ் தோல்வி அடைய அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் ல் இன்று இரண்டாவது நாளே இந்த டெஸ்ட் போட்டி முடிவடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.