Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அணியில் மீண்டும் இணைந்தார் ரிஷப் பண்ட்! ஆனால்….

நோய்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் நேற்றையதினம் இந்திய அணி வீரர்களுடன் மறுபடியும் இணைந்தார் .இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜில் நடக்கிறது.

டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இடத்தில் இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்து நாட்டின் கவுண்டி அணியுடன் பயிற்சி போட்டியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணியுடன் ஒன்றிணைந்து இருக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின்னர் ரிஷப் பண்ட் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை நேரில் காண்பதற்காக சென்றிருந்தார். அங்கிருந்துதான் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சென்ற எட்டாம் தேதி அன்று நோய்தொற்று உறுதி செய்யப்பட்ட ரிஷப் பண்ட் லண்டனில் இருக்கின்ற தனியார் சொகுசு விடுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். சிகிச்சையின் போது அவருக்கு சீரான இடைவெளியில் பலகட்ட பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நெகட்டிவ் என்று முடிவு வந்ததைத் தொடர்ந்து இந்திய அணியுடன் அவரை இணைவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆகவே நேற்று துர்காமில் இருக்கின்ற இந்திய அணியுடன் அவர் முறைப்படி இணைந்து கொண்டார்.

நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்து இருந்தாலும் அவருக்கு முழு உடல் தகுதியுடன் விளையாடுவதற்கான தகுதி இருக்கிறதா என்பதில் சந்தேகம் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அவர்தான் விக்கெட் கீப்பர் என்ற இடத்திற்கு முதலில் தேர்வாக இருக்கிறார். ஆகவே இந்த வாரம் முழுவதும் அவருக்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டு அவருடைய உடல் தகுதி பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர் குணமடைந்த போதும் இந்திய அணியின் பந்து வீச்சின் பயிற்சியாளர் பாரத் அருண், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன், அலுவலர் தயானந்த் கிராணி, உள்ளிட்டோருக்கும் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட நோய்த்தொற்று பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதியானது. இவர்கள் நான்கு பேரும் இன்னும் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version