இந்திய அணி நியூசிலாந்து உடன் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இதன் மூலம் இதுவரை வரலாற்றில் ஒயிட் வாஷ் ஆனதில்லை ஆனால் இந்த போட்டியில் ஒயிட் வாஷ் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மேலும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் அவர்கள் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இந்தியா ஏ அணியுடன் விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அதற்கு நாங்கள் தனி வலை பயிற்சி மேற்கொள்கிறோம் என்று கூறி அது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐ இடம் 3 நாட்கள் இந்த போட்டியை மீண்டும் நடத்த கோரிக்கை வைத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் வீரர்களுக்கு என்ன தவறு செய்கிறார்கள் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தெரியும். நவம்பர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி தொடங்கவுள்ளது.