இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல்

0
171
India vs Pakistan World Cup Cricket Match status on Today-News4 Tamil Online Tamil News Channel

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல்

இன்று(ஜூன்,16) மான்செஸ்டரில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் வழக்கம்போல் மழை குறிக்கிடுமா என இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்ததுடன் உள்ளனர்.

12ஆவது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது.  இதில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை 21 போட்டிகள் நடந்துள்ளன. இந்தியா விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் இரண்டில் வெற்றியும் ஒரு போட்டி மழையால் ரத்தானது. தென் ஆப்பிரிக்கவுடனான முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது லீக் ஆட்டதில் 36 ரன்கள் வித்தியாசத்திலும்  வெற்றிப்பெற்றது. நியூசிலாந்துடனான போட்டியில்தான் மழைக்குறிக்கிட்டதால் ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்தானது.

பாகிஸ்தான் அணியானது இத்தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரின் குறைந்தப்பட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற பெயர் பாகிஸ்தான் அணிக்கே சொந்தம். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் தோல்வி, இங்கிலாந்து அணியுடன் வெற்றி மற்றும் இலங்கையுடனான போட்டி மழையால் ரத்து என விளையாடிய பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் மழை குறுக்கீடு அதிகம் இருக்கும் என தெரிகிறது. இதுவரை இத்தொடரில் நான்கு போட்டிகள் மழையால் ரத்தானது . இலங்கை-பாகிஸ்தான், இலங்கை-வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா  மற்றும் இந்தியா-நியூசிலாந்து ஆகிய போட்டிகள் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய 6 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகக்கோப்பை அரங்கில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் அணி உள்ளது. பவுலிங்கில் முகமது ஆமிர் மிரட்ட காத்திருக்கிறார். இவருடன் வகாப் ரியாஸ் கைகோர்க்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு தொல்லை தான். அப்ரிதி, ஹசன் அலியும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக அமையலாம்.

இந்திய அணி வீரர் ஷிகர் தவான் காயத்தால் அவதிப்படுவதால் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் ராகுல் நல்ல அடித்தளம் அமைக்க முயற்சிக்க வேண்டும். கேப்டன் கோலி வழக்கமான பார்மை தொடர்ந்தால் சிறந்தது. நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் துவக்க வீரராக செல்வதால் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தோனி, பாண்ட்யா, தங்களின் சிறப்பான பினிஷிங்கை தொடர வேண்டும். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், பும்ரா மீண்டும் அசத்தலாம். சுழலில் சகால் இடம் உறுதி. ஆனால் குல்தீப்பிற்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெறுவார் என தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி அங்கு காலநிலை சாதகமான நிலையில் இருப்பதால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.