இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை தொடங்க இருக்கிறது. இதில் விளையாடுவதற்கு இரு அணி வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.இந்திய பிளையிங் 11 அனி சற்றேறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் வியூகமும் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர்பை மாதம் 13ஆம் தேதி முதல் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் பேட்டிங் பயிற்சியாளர் புலவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனாலிசிஸ்ட் நிரோஷன் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், இந்தப் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி அதாவது இன்றைய தினம் ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 27ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 23ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது அதேபோல முதல் டி20 போட்டி ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி 2வது டி20 போட்டி ஜூலை மாதம் 26ஆம் தேதி மற்றும் மூன்றாவது டி20 போட்டி ஜூலை மாதம் 29 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன. இந்த போட்டிகள் எல்லாம் கொழும்புவில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களின் பெயர் வருமாறு ஷிகர் தவான், பிரித்விஷா, சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, நிதீஸ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுவேந்திர சாஹல், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஸ்வர் குமார், சர்க்காரியா, உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது பலரும் அறிந்ததுதான்.
இந்த நிலையில், முதல் போட்டிக்காக இந்திய அணியை ராகுல் டிராவிட் சற்றேறக்குறைய முடிவு செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதில் முதல் ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து இருக்கிறார்கள் .மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, சஞ்சீவ் சாம்சன், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், நவதீப் சைனி, யுவேந்திரசாஹல் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற இருப்பதாக சொல்லப்படுகிறது.
மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என்பதுதான் டிராவிட்டின் திட்டம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் போதும் என்று முடிவு செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்திய அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் போதும் என்று முடிவு செய்து இருப்பதால் அவர் நிச்சயமாக பந்து வீசுவார் என்று சொல்லப்படுகிறது. முதுகு வலியின் காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் இருந்துவந்தார். இந்தநிலையில், டிராவிட் அவருக்கென்று தனியாக பயிற்சி அளித்து அவரை பந்துவீச தயார் செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.