Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோனியின் சாதனையை முறியடித்த அக்சர் பட்டேல்!

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேர பதட்டமான ஓவரில் இந்தியாவுக்கான வெற்றியை அக்சர்ப்பட்டேல் மிகப்பெரிய சிக்சர் மூலமாக பெற்றுத் தந்தார். இதன் மூலமாக மகேந்திர சிங் தோனியின் 17 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்தார் என்று சொல்லப்படுகிறது.

கடைசி 10 ஓவர்களில் இன்னும் 5️ விக்கட்டுகளை மட்டுமே கைவசம் வைத்திருந்த நிலையிலும் கூட, 7வது வரிசையில் களமிறங்கிய அக்சர்ப்பட்டேல் 35 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்கள் அடித்து 64 ரன்கள் சேர்த்து மிகவும் அட்டகாசமான நிறைவை பதிவு செய்தார் அக்சர் பட்டேல் நேற்று பிரமாண்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

இதன் மூலமாக இலக்கை விரட்டும் போது 7வது வரிசையில் களமிறங்கும் இந்திய வீரர் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச சிக்ஸர்கள் எண்ணிக்கையில் அக்சர்ப்பட்டேல் 2005 ஆம் வருடம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோனி செய்த சாதனையை தற்போது அவர் முறியடித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மகேந்திர சிங் தோனி 3 சிக்ஸர்கள் மட்டுமே அடித்தார். அப்போது இதே டவுனில் இறங்கி தற்சமயம் அக்சர்ப்பட்டேல் அதே இடத்தில் இறங்கி 5 சிக்ஸர்களை அடித்து தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

இதற்கு முன்னர் அதிரடி ஆட்டக்காரர் அட்டகாசமான ஃபினிஷர் தோனியால் அனாவசியமாக ஒழித்துக் கட்டப்பட்ட ஆல்ரவுண்டர் யூசுப் பதான் 2 முறை இதே டவுணில் இறங்கி 3️ சிக்ஸர்களை அடித்து தோனியை சமன் செய்திருக்கிறார்.

யூசுப் தான் இந்த சாதனையை தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக செய்தார். தன்னுடைய ஆட்டம் தொடர்பாக அக்ஸர்படேல் அதன் பிறகு தெரிவிக்கும்போது இது சிறப்பான இன்னிங்க்ஸ் முக்கியமான நேரத்தில் வந்தது இது அணி தொடரை வெல்ல உதவியது என்பது மிகவும் முக்கியம். என்று தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் இவ்வாறு அணி வெற்றி பெற செய்துள்ளோம். அமைதியாக இருந்து கொண்டு தீவிரத்தை கூட்ட வேண்டும் அவ்வளவுதான் நான் 5️ வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறேன். தொடர்ந்து இவ்வாறு ஆட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version