Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெற்றி வாகையோடு இன்று டி 20 தொடரில் களமிறங்கும் இந்தியா… அணிக்குள் நடக்கும் மாற்றம்!

வெற்றி வாகையோடு இன்று டி 20 தொடரில் களமிறங்கும் இந்தியா… அணிக்குள் நடக்கும் மாற்றம்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி 20 தொடர் இன்று தொடங்க உள்ளது.

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்து சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்து தங்கள் திறமையை நிரூபிக்கும் விதமாக அமைந்தது.

இதையடுத்து இன்று டி 20 தொடர் தொடங்குகிறது. இதில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் அணியில் இணைகிறார். ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஜடேஜா, பாண்ட்யா ஆகியோரும் இணைய உள்ளனர். இதனால் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்மில் இல்லாத கோஹ்லிக்கு இந்த தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரிலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வொயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி டி 20 தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Exit mobile version