Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

T20 போட்டி – கேப்டன் கோலி செய்த சாதனை என்ன?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் கேஎல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

கேப்டன் கோலியும் தன் பங்குக்கு சிக்ஸர்மலைகளாக அடித்து நொறுக்கினர்.241 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் கேப்டன் விராட் கோலி இந்தியாவில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மைல்கல்லைக் கடந்த முதல் வீரர் ஆனார். நியூஸிலாந்தின் கப்தில் மற்றும் மன்ரோ ஆகியோர் நியூஸ்லாந்தில் 1,000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளனர்.

முன்னதாக ரோஹித் சர்மா தனக்கேயுரிய காட்டடியில் 400 வது சர்வதேச சிக்சர்களை எடுத்து குறைந்த போட்டிகளில் 400 சிக்சர்கள் மைல்கல்லை எட்டினார். மேலும் கெய்ல், அப்ரீடிக்குப் பிறகு 400 சிக்சர்கள் மைல்கல்லை கடந்த ஒரு வீரர் ஆனார் ரோஹித் சர்மா.
அதே போல் மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 500 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோஹித் சர்மா.

Exit mobile version