இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிகளுக்கு இடையேயான 3 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் இரண்டாவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் 8ம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் 16ம் தேதியும் முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் 18ம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் 28ஆம் தேதி நடக்கிறது.
இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடரில் இடம் பிடித்த வீரர்கள் மாற்றமின்றி வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பொல்லார்ட் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஏற்கனவே இந்த ஆண்டின் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்று தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.