இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் யார்? யார்? அணியில்

0
179

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.

. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.

அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய நிலையும் இருக்கிறது. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய நிலையும் இருக்கிறது.

தொடக்க வீரர் தவான் மிகவும் மோசமான நிலையில் உள்ளார். ஆனாலும் தேர்வு குழு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி உள்ளது. அவர் நெருக்கடியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இது தவிர வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். வேகப்பந்து வீரர்களான முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை தொடர்ச்சியாக இரண்டு முறை (2018 நவம்பர், 2019 ஆகஸ்டு) இழந்து இருந்தது.

இதற்கு தற்போது நடைபெற இருக்கும் தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போல்லார்ட் சிறந்த அதிரடி வீரர் ஆவார். இது தவிர லெண்டில் சிம்மன்ஸ், லீவிஸ், ஹெட்மயர், முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், கோட்ரல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். 7 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.