உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!!

0
101
#image_title

உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!!

பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியர்கள் விளையாடி உள்ளனர். 2000 மற்றும் 2022ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை. எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல் அல்லது இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில், எட்டுநபர்கள் தேர்வானார்கள். அதில் நான்கு இந்தியர்களாக இருந்தனர். செஸ் விளையாட்டில், இதுவும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

அதாவது இறுதி எட்டு வீரர்களில் பாதி பேர் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனா, ரஷ்யா அல்லது போலந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை. அதனால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் உணர முடிந்தது. மேலும், இந்த போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் பெரும்பாலும், இருபதுகள் மற்றும் இருபதுகளின் (வயது அடிப்படையில்) தொடக்கத்தில் உள்ள வீரர்கள். இந்தியாவின் இளம் தலைமுறை விளையாட்டை எப்படி உள்வாங்கி உள்ளது என்பதற்கு இந்த இளம் முகங்களே சாட்சி.

உலகத் தரவரிசையில் 22வது இடத்திலுள்ள இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா (வயது 18) மற்றும் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, உலகின் ‘நம்பர்-1’ வீரர், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் அவர்களும் இறுதிப் போட்டியில் மோதினர்.

இறுதிப்போட்டி வெற்றி- தோல்வியின்றி டிராவில் முடிந்தாலும். பிரத்கேயமாக நடைபெற்ற சிறப்பு போட்டியில் பிரக்ஞானந்தா-வை வீழ்த்தி, கார்ல்சன் வெற்றி வாகை சூட்டினார்.

இருப்பினும் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, மாபெரும் வெற்றி பெற்றதாக கருதி இந்தியர்கள் அனைவரும் கொண்டாடினர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா அவர்களுக்கு தமிழகத்தில் அனைத்து மக்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.

இந்தியாவில் சதுரங்கப் போட்டி என்றால் விஸ்வநாதன் ஆனந்த் மட்டும் தான் என்ற நிலை மாறி இன்று நிறைய சதுரங்க வீரர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக இளம் சதுரங்க வீரர்கள் உருவாகியுள்ளது, இந்திய விளையாட்டுத் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய தன்னம்பிக்கையாகும்.