ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு! 

0
294
India will not participate in the ICC Champions Trophy series! BCCI Action Announcement!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
அடுத்த ஆண்டு அதாவது 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஓடிஐ என்று அழைக்கப்படும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்று விளையாடும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்தடுத்து 3 ஆண்டுகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று மாறியது.
கடைசியாக 2017ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. அந்த தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று சேம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. அதன் பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கின்றது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டு பிப்ரவரி மார்ச் ஆகிய மாதங்களில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அரசியல் பிரச்சனை இருந்து வருவதால் இந்தியா அணி மற்றும் பாகிஸ்தான் அணி இரண்டும் உள்ளூர் தொடர்களில் விளையாடாமல் இருக்கின்றது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டும் விளையாடி வருகின்றது.
கடைசியாக பாகிஸ்தான் நாட்டில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றது. அதிலும் கூட இந்திய அணி பாகிஸ்தான் நாட்டுக்கு செல்லவில்லை. மாற்றாக இந்திய அணி விளையாடிய போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது.
இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் 2025ம் ஆண்டு நடைபெறும் சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா இல்லையா என்பது குறித்து பிசிசிஐ எதுவும் கூறாமல் இருந்த நிலையில் ஐசிசி நிர்வாகம் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான லாகூரில் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தது. இதையடுத்து தற்பொழுது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கின்றது.
மேலும் பிசிசிஐ நிர்வாகம் ஐசிசி நிர்வாகத்திடம் “இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டுக்கு வந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடாது. மாற்றாக இந்தியா விளையாடும் போட்டிகளை ஐக்கிய அமீரகம் அல்லது இலங்கை நாட்டில் நடத்த வேண்டும். அதே போல இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இறுதி போட்டியை வேறு நாட்டில் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கின்றது.
இந்தியா கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் நாட்டுக்கு செல்ல மறுக்கின்றது என்று கூறினாலும் இடையில் அரசியல் சார்ந்த பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. இல்லையென்றால் இந்தியா பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும்.
இந்தியா மட்டுமே பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வருகின்றது. ஆனால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
அது மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டை பொறுத்த வரை இந்திய கிரிக்கெட் அணி செல்வாக்கு மிக்க அணியாக திகழ்கின்றது. இருப்பினும் பிசிசிஐ நிர்வாகம் வைத்த இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.