Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!!

cricketer Muttiah Muralitharan sensational interview

Muttiah Muralitharan

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் மோத உள்ளன.இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மண்ணில் நடைபெற உள்ளதால், இது ஏராளமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னால் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடித்துக் கொண்டுள்ள திரைப்படம் தான் “800”இந்த திரைப்படத்தில் இவரது வாழ்க்கை வரலாரானது தழுவி எடுக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகி கொண்டுள்ள இந்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் படம் பிடித்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அங்குள்ள செய்தியாளர்கள், அவரிடம் சில கேள்விகளை எழுப்ப தொடங்கினர். அதில் ஒரு செய்தியாளர் உலகக் கோப்பை தொடரை வெல்லப்போவது எந்த அணி? என கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு அவர் இந்தியா ஒரு திறமையுள்ள நாடு மேலும் இந்திய நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் அவர்களது 100 சதவீத உழைப்பை செலுத்தி வருகின்றனர். இந்தியா வெற்றி பெறுவதற்கான அதிர்ஷ்டமும், சந்தர்ப்பமும், அமைய வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கின்றேன். என இலங்கை அணையின் முன்னால் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பதில் அளித்துள்ளார்.இவரது இந்த பேட்டியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Exit mobile version