Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெஸ்ட் கிரிக்கெட்! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 102.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 327 ரன்கள் சேர்த்து இருந்தது. இதனை தொடர்ந்து தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்கா அணி 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலமாக, 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறத் தொடங்கினார்கள். கடைசியில் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 197 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதன்காரணமாக, தென்னாபிரிக்காவை விட 304 ரன்கள் முன்னிலையில் இருந்தது இந்திய அணி இதனைத்தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடியது 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியின் கேப்டன் எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த சூழ்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது பகல் ஒரு மணி அளவில் தொடங்கிய இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேலும் 211 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், தென்னாபிரிக்க அணி களம் இறங்கியது அந்த அணியின் கேப்டன் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய பவுமா இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தார். மிகவும் சிறப்பாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் எல்கர் 77 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய டி.காக் 20 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன் பிறகு களமிறங்கிய முழுக்க ஒரு ரன்னில் பெவிலியன் திரும்ப தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து உணவு இடைவேளை வரை 182 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் பவுமா 34 ரன்களுடனும்,யான்சென் 5 ரன்களுடனும், களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பின்னர் முகமது சாமி பந்து வீச்சில் அவர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ரபாடா, இங்கிடி, உள்ளிட்டோர் அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்கள்.

இதன் காரணமாக, இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது, அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி மாதம் 3ம் தேதி ஜொகன்னஸ் பர்க்கில் நடைபெற இருக்கிறது. இதே உற்சாகத்துடன் அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவில் தொடர் வெற்றி என்ற சிறப்பான செய்தியுடன் இந்தியா எதிர்வரும் 2022ஆம் ஆண்டை தொடங்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Exit mobile version