வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!!! தங்கம் மற்றும் வெண்கலம் வென்று வீராங்கனைகள் சாதனை!!!

0
115
#image_title

வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!!! தங்கம் மற்றும் வெண்கலம் வென்று வீராங்கனைகள் சாதனை!!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்து இந்திய வில்வித்தை வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் வில்வித்தை போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஜோதி சுரேகா அவர்கள் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஜாதி சுரேகா அவர்கள் தென் கொரியா நாட்டை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை சோ சாவ்வொண் அவர்களை 149-145 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது அவர். பெறும் மூன்றாவது தங்கப் பதக்கம் ஆகும். இவர் நடப்பு ஆசிய விளையாட்டுப் பேட்டிகளில் மட்டும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலமாக இந்தியா ஆசிய விளையாட்டு போட்டிகளில் தன்னுடைய 100வது பதக்கத்தை வென்றுள்ளது.

அதாவது வீராங்கனை ஜோதி சுரேகா அவர்கள் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், பெண்கள் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும், என்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்தியாவில் இதே வில்வித்தை போட்டியில் கலந்து கொண்ட அதிதி சுவாமி அவர்கள் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இந்தியா தற்பொழுது வரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என்று மொத்தம் 100 பதக்கங்களை வென்று பிக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.