Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !

ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !

பெண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸி. இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா (29), ரோட்ரிக்யூஸ்(26) மற்றும் திபாலி ஷர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இதனால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அல்ஸியா ஹீலி 51 ரன்களும்,  அஷ்லே கார்ட்னர் 34 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் ஆஸி. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்களும், ஷிகா பாண்டே 3 விக்கெட்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இதன் மூலம் உலக்கோப்பையின் முதல் வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது.

Exit mobile version