Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் ஐந்தாவது போட்டியையும் வென்ற இந்தியா!

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் ஐந்தாவது போட்டியையும் வென்ற இந்தியா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் நான்கு போட்டிகளில் 3ல் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றது. இதையடுத்து நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 5 ஆவது டி 20 போட்டி ப்ளோரிடாவில் நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 100 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அக்‌ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரவி பிஷ்னாய் 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார். அனைத்து விக்கெட்களையும் சுழல்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர்.

 இதையடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஏற்கனவே ஒருநாள் போட்டியையும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version