Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அசத்திய சூர்யகுமார் யாதவ்… மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!

அசத்திய சூர்யகுமார் யாதவ்… மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதையடுத்து தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடர் சமநிலையில் இருந்தது.

இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 164 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸின் கே மேயர்ஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 76 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றி மூலம் 2- 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்த போட்டியின் போது, கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக, பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version